பொது­ந­ல­வாய செய­ல­கத்­திற்­கான நிதியை இடை­நி­றுத்­திய பிரித்­தா­னிய அர­சாங்கம்

Published By: J.G.Stephan

14 Feb, 2020 | 11:32 AM
image

பிரித்­தா­னிய அர­சாங்­க­மா­னது லண்­ட­னி­லி­ருந்து சர்­வ­தேச பொது­ந­ல­வாய அமைப்பைச் செயற்­ப­டுத்தி வரும்  பொது­ந­ல­வாய செய­ல­கத்­திற்கு தன்னால் அளிக்­கப்­பட்டு வரும் நிதியை இடை­நி­றுத்­தி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

மேற்­படி பொது­ந­ல­வாய செய­லகம் தனது நிதி செயற்­கி­ர­மங்­களை முன்­னேற்றும் வரை அதற்கு பிரித்­தா­னி­யாவால்  வரு­டாந்தம்  தன்­னார்வ அடிப்­ப­டையில் வழங்­கப்­படும்  4.7 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான நிதியை நிறுத்தி வைப்­ப­தாக பொது­ந­ல­வாய செய­ல­கத்தின் செய­லாளர் நாய­க­மான பரோனஸ் ஸ்கொட்­லான்ட்­டுக்கு அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் அந்த செய­லகம் வெளி கணக்­காய்­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட சிபா­ரி­சு­களை நிறை­வேற்றி வரு­வ­தாக வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

பரோனஸ் ஸ்கொட்லான்ட் தனது நண்­ப­ரொ­ரு­வரால் செயற்­ப­டுத்­தப்­படும் கம்­ப­னி­யொன்­றுக்கு இலா­ப­க­ர­மான ஆலோ­சனை உடன்­ப­டிக்­கை­யொன்றை வழங்கி வழ­மை­யான போட்டி அடிப்­ப­டை­யி­லான உடன்­ப­டிக்கை விதி­களை மீறி­யுள்­ள­தாக கணக்­காய்­வா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டி­ய­தை­ய­டுத்தே பிரித்­தா­னியா மேற்­படி  நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­ச­மயம் நியூ­ஸி­லாந்து மற்றும் அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களும் பொது­ந­ல­வாய செய­ல­கத்­துக்­கான தமது விருப்­பு­ரிமை நிதியை அந்த செய­ல­கத்தின் நிதி ஸ்திரத்­தன்­மை­ய­டையும் வரை இடை­நி­றுத்­தி­யுள்­ளன.

பிரித்­தா­னி­யாவின் மேற்­படி தீர்­மானம் பொது­ந­ல­வாய செய­ல­கத்­திற்கு பாரிய நிதி நெருக்­கடி அச்­சு­றுத்­த­லொன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன்  பரோனஸ் ஸ்கொட்­லான்ட்டின் தலை­மைத்­துவம் குறித்தும் புதி­தாக கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது.

பரோனஸ் ஸ்கொட்லான்ட் இரண்­டா­வது தவ­ணை­யாக பதவி வகிக்கும் வகையில் அவ­ரது  பதவிக் காலத்தை இந்த வருடம் புதுப்­பிக்க விடுக்­கப்­பட்ட அழைப்­புக்­களை பொது­ந­ல­வாய அர­சாங்­கங்களின் தலை­வர்கள் ஏற்­க­னவே நிரா­க­ரித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­படி நிதி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்­ளமை குறித்து பிரித்­தா­னிய வெளிநாட்டு அலு­வ­ல­கத்தின் பேச்­சாளர் ஒருவர் தெரிவிக்கையில், நாம் அங்கத்துவ நாடுகளுக்கு பயனுறுதிப்பாடு மிக்க பொதுநலவாயமொன்றை வழங்க உறுதிபூண்டுள்ளோம். அதனால் இந்த நிதியாண்டுக்கு தொழில்நுட்ப கூட்டுறவுக்காக பொதுநலவாய நிதியத்துக்கு நிதியளிப்பதற்கு ஒரு தொகை நிபந்தனைகளை முன்வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05