குமார் சங்­கக்­கார தலை­மை­யி­லான எம்.சி.சி.கழக அணி பாகிஸ்தானுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்­ளது.

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்­தப் ­பட்ட தீவி­ர­வாதத் தாக்­கு­த­லுக் குப் பின்னர் பாகிஸ்­தானில் கிரிக்கெட் தொடர்கள் நடத்­தப்­ப­ட­வில்லை. எந்த சர்­வ­தேச அணியும் அங்கு சென்று விளை­யாட விருப்பம் தெரி­விக்­கை­வில்லை.

இலங்கை அணி மீது தாக்­கு தல் நடந்­த­போது குமார் சங்­கக்கா­ரவும் அந்த பேருந்தில் பயணம் செய்­தி­ருந்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் பாகிஸ்தான் சென்­றுள்ளார் குமார் சங்­கக்­கார.

இன்று ஆர­ம்ப­மா­க­வுள்ள இந்தத் தொடரில் மூன்று இரு­ப­துக்கு 20 போட்­டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. அனைத்து போட்­டி­களும்

லாகூரில் நடை­பெறும். சங்­கக்­கார தலை­மை­யி­லான அணியில் ரவி போபரா, ரோலண்ட் வான் டெர் மெர்வே மற்றும் ரோஸ் வைட்லி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.