(எம்.மனோ­சித்ரா)

எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான புதிய அர­சியல் கூட்­டணி எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்தச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது என்­பது தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சைக்கு தீர்வு காண்­ப­தற்­கான இறு­திக்­கட்ட பேச்­சு­வார்த்தை இன்று இடம்­பெ­ற­வுள்­ளது.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐவ­ர­டங்­கிய குழு­வி­னரும் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான ஐவ­ர­டங்­கிய குழு­வி­னரும் இன்று பிற்­பகல் 2.30 மணிக்கு சந்­தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

கூட்­ட­ணிக்­கான சின்னம் தொடர்பில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அணி­யி­ன­ருக்கும் சஜித் தலை­மை­யி­லான அணி­யி­ன­ருக்­கு­மி­டையில் பெரும் இழு­பறி நிலை ஏற்­பட்­டுள்­ளது. யானைச் சின்­னத்­தி­லேயே போட்­டி­யிட வேண்­டு­மென்று ரணில் தரப்­பினர் வலி­யு­றுத்தி வரு­கின்­னறர். ஆனால், கூட்­ட­ணி­யா­னது இதயம் சின்­னத்­தி­லேயே போட்­டி­யிட வேண்­டு­மென்று சஜித் அணி­யினர் விடாப்­பி­டி­யாக இருக்­கின்­றனர். இல்­லையேல் கூட்­ட­ணிக்­கான சின்­ன­மாக யானை­யை­வ­ழங்க வேண்டும் என்­றும்­வ­லி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இந்த இழு­பறி நிலைமை தொடர்பில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இரவு ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கபிர் ஹாசிம் ஆகியோர் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். இந்த பேச்­சு­வார்த்­தையின் போது சின்னம் குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் ஒன்­றிற்கு வர­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து சஜித் பிரே­ம­தாச இந்தச் சந்­திப்பில் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இத­னை­ய­டுத்து இன்­றைய தினம் இரு­த­ரப்­பையும் சேர்ந்த சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் சந்­தித்து கலந்­து­ரை­யாடி சின்னம் தொடர்பில் இறுதி முடிவு எடுப்­ப­தென்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்தே இன்று பிற்­பகல் 2.30 மணிக்கு இரு தரப்பின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கலந்­து­ரை­யாட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சந்­திப்பு பிற்­பகல் இடம்­பெ­று­கின்­ற­மையால் இன்று காலை நடை­பெ­ற­வி­ருந்த கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவினை ?அடிப்படையாக வைத்தே எதிர்வரும் திங்கட்கிழமை செயற்குழுவை தீர்மானம் எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.