குவைத்துக்கு பணியாற்றுவதற்காக இலங்கையிலிருந்து சென்ற 46 பேர் பல்வேறு இன்னலுக்கு முகங்கொடுத்த நிலையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 


குறித்த பணிப்பெண்களில் அதிகமானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதியை சேர்ந்தவர் ஏனையவர் இலங்கையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்பெண் பணியாற்றி வீடுகளின் எஜெமான்களின் தொல்லை, துன்புறுத்தல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாமல் குறித்த வீடுகளிலிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். 


அத்துடன்  குவைத் குற்றத்தடுப்பு பிரிவினரால்  13 பணிப்பெண்களைப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 33 பேர் குவைத்திலுள்ள இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதரகத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


குறித்த பணிப்பெண்கள் இன்று காலை 6.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 
பணிப்பெண்களின் சொந்த செலவில் விமான பற்றுச்சீட்டுக்களையும், தற்காலிகமான கடவுச்சீட்டுகளையும் பெற்று  இலங்கைக்கு வந்துள்ளனர். 


குறித்த பணிப்பெண்கள்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள இலங்கைக்கான  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகத்தில் புகார் செய்துவிட்டு  தங்களின் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.