உதயங்க வீரதுங்க விசாரணைகளின் பின் கைது : நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

Published By: R. Kalaichelvan

14 Feb, 2020 | 09:45 AM
image

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 4.37 மணியளவில் அவர் இலங்கை ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் வழியாக அவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்த அவரிடம் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ந நிலையில் அவரை கைது செய்துள்ளனார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்ற சுமார் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உத­யங்க வீர­துங்க சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்டு பிடியா­ணையும் பிறப்­பிக்­கப்­பட்­டிருந்தது.

2016.10.20 ஆம் திகதி அப்போ­தைய கோட்டை நீதி­வா­னாக இருந்த லங்கா ஜய­ரத்ன குற்றவியல் சட்­டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ்  உதயங்க வீரதுங்கவை, சர்­வ­தேச பொலி­ஸாரின்  உத­வி­யுடன் கைதுசெய்­வ­தற்­கான சிவப்பு அறி­வித்தல், பிடி­யா­ணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று இலங்கை வந்தடைந்த நிலையில் விசாரணைகளின் பின் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34