(செய்திப்பிரிவு)

வட மற்றும் தென் கொரியா தொடர்பிலான மோதல் சூழல்களை வெளிப்படுத்தும் உலகம் அங்குள்ள இயற்கையின் அதிசிய படைப்புகளை அறியப்படுத்துவதில் பின்னிற்கின்றனர். குறிப்பாகத் தென் கொரியாவை எடுத்துக்கொண்டால் தொழில்நுட்ப சார் புத்தாக்கத்திற்கு முக்கியமானதொரு நாடாகும். அதே போன்று அந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் இயற்கை மீது அந்த மக்கள் கொண்டுள்ள ஆர்வம் என்பன மிகவும் முக்கியமானதொன்றாகும். 

அவ்வாறானதொரு இடமே தோடம்பழ சொக்லேட்டுகளுக்கு பெயர் போன தென் கொரியாவின் ஜெஜு தீவு. இங்குக் கடற்கரை மாத்திரமல்ல பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன. ஜெஜு தீவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஹல்லிம் பூங்கா , ஜெஜு நகரத்திற்கு மேற்கே அமைந்துள்ள மவுண்ட். ஹல்லிம்- யூப்பில் கடற்கரையோர ஹல்லசன்பகுதி என்பன முக்கியமானவையாகும்.

பியாங்டோ தீவு, ஹையோப்ஜே கடற்கரை மற்றும் கியூம்யூங் கடற்கரை ஆகியவற்றின் இனிமையான காட்சிகள் அனைத்துலக சுற்றுலாப்பயணிகளின் உள்ளங்களைக் கவர்ந்த இடமாகும். ஹையோப்ஜெரி பகுதியில் காணப்படும் தரிசு நில பூங்கா எல்லையற்ற இயற்கை அழகை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. 

சுமார்100 ஆயிரம் சதுர மீற்றரை எட்டும் ஹலிம் பூங்கா  எந்தவொரு பருவத்திலும் அனுபவிக்கக்கூடிய பல்வேறு வகையான இயற்கை வளத்தை  கொண்டுள்ளது. 

பாம் ட்ரீ வீதிகள் ,  ஜெஜு ஸ்டோன் மற்றும் பொன்சாய் கார்டன், வாட்டர் கார்டன், துணை வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் பல்வேறு இயற்கை அழகை இங்குப் பார்த்து ரசிக்கலாம். 

ஹலிம் பூங்காவில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் ஹையோப்ஜெய்குல் மற்றும் சாங்யோங்குல் குகைகள் ஆகும்.  இது உலகின் இரு பரிமாண குகைகளாக அறியப்படுகிறது. கூடுதலாக, ஒரு நாட்டுப்புற கிராமம், குழந்தைகள் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் வெளிப்புற குடியிருப்பு வசதிகள் என்பன சுவாரஸ்யமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.