2009 லாகூர் தாக்குதல் எனக்கு பல விடயங்களை கற்றுக்கொடுத்தது – பாக்கிஸ்தானில் சங்ககார

14 Feb, 2020 | 08:18 AM
image

2009 மார்ச் மூன்றாம் திகதி லாகூரில் இலங்கை அணியினரின் பேருந்தினை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை என்றும் மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்துள்ள குமார்சங்ககார இது வாழ்க்கை மற்றும் விளையாட்டு பற்றிய மற்றொரு கோணத்தை உங்களிற்கு கற்றுத்தருகின்றது, இவ்வாறான அனுபவம் மூலம் நீங்கள் உங்கள் குணாதிசயங்கள் மற்றும் விழுமங்கள் குறித்து அதிகம் கற்றுக்கொள்கின்றீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எம்சிசி அணிக்கு தலைமை தாங்கி 11 வருடங்களின் பின்னர் பாக்கிஸ்தான் சென்றுள்ள குமார் சங்ககார லாகூர் குலான்டர்ஸ் அணியுடன் இன்று ரி20 போட்டியில் விளையாடவுள்ளார்.

பாக்கிஸ்தானில் அன்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து எனக்கு எந்த பிளாஸ்பாக்குகள் தேவையில்லை என தெரிவித்துள்ள அவர் நான் அன்றைய நாளை மிகவும் தெளிவாக நினைவில் வைத்திருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

அந்த நாள் நினைவுகளில் நான் வாழ்வதில்லை,என குறிப்பிட்டுள்ள சங்ககார அந்த நாள் என்னை மனவேதனைக்கு உட்படுத்துவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது நீங்கள் ஒருபோதும் மறக்ககூடாத ஒரு அனுபவம், அது உங்களை வலுப்படுத்துகின்றது எனவும் சங்ககார தெரிவித்துள்ளார்.

எனக்கு இது குறித்து பேசுவது குறித்து எந்த தயக்கமும் இல்லை என தெரிவித்துள்ள அவர் அந்த நாள் எனக்கு கவலையளிப்பதில்லை,அது என்னை வலுப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

லாகூரிற்கு மீண்டும் வரமுடிந்ததை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்,அதேவேளை அன்றைய நாளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களையும் நினைவுகொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய நாளில் இடம்பெற்ற விடயத்தினை இலங்கை அணியின் ஒவ்வொரு வீரரும் தங்களிற்கு உரித்தான வழிமுறைகள் மூலம் கையாண்டார்கள் என தெரிவித்துள்ள சங்ககார ஆனால் நீங்கள் நெருக்கடிகளை சந்திக்கும்போது,சவால்களை சந்திக்கும்போது நீங்கள் அதனை வெற்றிகரமாக கடந்து செல்லவேண்டும் அதுவே எங்களை ஐக்கியப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

இது முன்னோக்கி நகர்வதை பற்றியது கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகயிருப்பதை பற்றியது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையர்கள் என்பதால் நீங்கள் இந்த பாடத்தை சிறப்பாக கற்றுக்கொள்கின்றீர்கள் ஏனெ;றால் யுத்தகாலம் முழுவதும் கிரிக்கெட்டே மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் லாகூர் தாக்குதல்  சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதால் நீங்கள் உண்மையான வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் ஏனையவர்களின் அனுபவங்களில் இருந்தும் தப்பமுடியாது என்ற உண்மையை உணர்த்தியது என குறிப்பிட்டுள்ள குமார் சங்ககார அது உண்மையில் எங்களை பலப்படுத்தும், எங்களை பணிவானவர்களாக்கும், பலவிடயங்களை அர்த்தப்படுத்தும் அனுபவமாக அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09