(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொபட் ஜஹ்சம் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை இன்று பத்தரமுல்லையிலுள்ள நீர் வழங்கல் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

இதன்போது இருவருக்குமிடையில் இலங்கையில் குடிநீர் வழங்கல் துறையின் அபிவிருத்தி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிகழ்சித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித்தலைவர் சட்டத்தரணி நிமல் ரணவக்க, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி சரத் ஆர்.ரணசிங்க மற்றும் இணைப்புச் செயலாளர் ஜி.வி.டி.திலகசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.