(செ.தேன்மொழி)

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அமெரிக்க வங்கி கணக்கில் ஒரு இலட்சம் டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுதந்திர தேசிய முன்னணியின் பிரசாரச் செயலாளர் மொஹம்மட் முஷாம்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

அமெரிக்க வங்கிகணக்கொன்றில் ரிசாத் பதியூதீனின் பெயரில் ஒரு இலட்சம் டொலர்கள் வைப்பிளிடப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் முறைபாடு அளிக்கவே இவர் இவ்வாறு பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ளார்.