மொனராகலை நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக ஊழியர் ஒருவர் மண் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்னர்.

குறித்த நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் பொறுப்பாளராக சேவை புரிந்த மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 52  மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சௌபாக்யா வேலைத்திட்ட ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றிருந்த போது மண்வெட்டும் இயந்திர சாரதிக்கு உதவி செய்துள்ளார்.

அதன்போது, தவறுதலாக கீழே விழுந்து இயந்திரத்தில் சிக்குண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மண்வெட்டும் இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.