தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியாவின் அதிகாரியொருவர் பொதுக் குளியல் அறையில் நீராடுவதற்கான முயற்சியை முன்னெடுத்த நிலையில் அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வடகொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இதுவரையில் இணங்காணப்படவில்லை. இருந்தபோதிலும் வடகொரியாவானது தனது நாட்டிற்கு கொரோனா பரவுவதை தடுக்க பல முயற்சிகளை கடுமையான நடவடிக்களை முன்னெடுத்துள்ளது.

இந் நிலையில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு வந்த வடகொரியாவைச் சேர்ந்த வர்த்தக பிரிவு அதிகாரியொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தல் தனிமைப்படுத்திப்பட்டிருந்தார்.

சீனாவுக்கு சென்றிருந்த அல்லது அந்த மக்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் வடகொரியா ஜனாதிபதி கிம்யொங் உன்னின் உத்தரவுக்கு அமைவாகவே அவர் இவ்வாறு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டார்.

இந் நிலையில் குறித்த நபர் அனுமதியில்லாது தனிமைப்படுத்தலை விட்டு விலகி, பொது குளியலறையில் நீராடச் சென்ற குற்றச் சாட்டுக்காக அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய அதிகாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை வடகொரியாவின் மேலும் ஒரு அதிகாரி சீனாவுக்கு மேற்கொண்டிருந்த தனது பயணங்களை மறைக்க முயன்ற குற்றச்சாட்டுக்காக வடகொரிய பண்ணையொன்றுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.