பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் பஸ் வண்டியொன்றுடன் ரயில் பெட்டியொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் குறித்த பஸ்ஸில் மாணவர்கள் எவரும் இருக்காத நிலையில் பஸ் வண்டிக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

கொழும்பு - கொலன்னாவை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலன்னாவை பகுதியில் எரிபொருள்  ஏற்றிச் செல்லும் ரயில் ஒன்றின் பெட்டியொன்றே இவ்வாறு கழன்றுசென்று குறித்த பஸ் வண்டியுடன் மோதியுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொலன்னாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.