தீராத கோபத்தால் மனைவியை கொலை செய்து, தோலை உரித்து ஏரியில் வீசிச் சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோவை சேர்ந்த 46 வயதுடைய நபரொருவர், தனது 25 வயதுடைய மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த குறித்த நபர், தனது மனைவியை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துள்ளார். பின்னர், இறந்த மனைவியின் உடல் தோலினை உரித்து, உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக வெட்டி, ஏரியின் வீசியுள்ளார்.அடையாளங்காண முடியாத படி சடலத்தை அப்புறப்படுத்திய பின்னர், தனது முதல் மனைவிக்கு தொலைபேசி வாயிலாக நடந்தவற்றை தெரியப்படுத்தியுள்ளார். சம்பவத்தை அறிந்த முதல் மனைவி, பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு  விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டதில், நடந்தவற்றை பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன. 

 மேலும், தோல் உரிக்கப்பட்ட நிலையிலிருந்த குறித்த பெண்ணின் சடலத்தை புகைப்படமெடுத்து அந்நாட்டு ஊடகங்கள் பயன்படுத்தியதையடுத்து, குறித்த விடயத்திற்கு மெக்சிகோவின் தேசிய மகளிர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தோடு, அந்நகரம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.