இரவில் கண்விழித்து பணியாற்றுபவர்களுக்கு உறக்கமின்மை தொடர்பான பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு நரம்பியல் கோளாறு ஏற்பட்டு, வலிப்பு நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது என்று நரம்பியல் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
மருத்துவ தொழில் நுட்பங்கள் வளர்ச்சி அடைந்தாலும் இன்றும் மக்களிடத்தில் வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்படும் பொழுது அவருக்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் குறித்து பெரும்பாலானவர்கள் இன்றும் அறிந்திருக்கவில்லை.
அதனால் அது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். தலையில் காயங்கள் ஏற்பட்டாலோ, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டாலோ, மது, புகையிலை போன்றவற்றை பயன்படுத்தினாலோ வலிப்பு நோய் ஏற்படும்.
அத்துடன் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். தற்போதைய சூழலில் இரவு நேரத்தில் கண்விழித்து பணியாற்றுவது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டதால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது. அத்துடன் உடலின் இயற்கையான இயக்கத்திற்கு எதிராக நாம் செயல்படுவதால், இதன் காரணமாகவும் வலிப்பு நோய் வரக்கூடும் என்று நரம்பியல் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, மனஅழுத்தம் இல்லாத நிலை என சீரான வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் மட்டுமே இத்தகைய நோய் பாதிப்பிலிருந்து அடுத்த தலைமுறையை பாதுகாக்கலாம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
டொக்டர் பூபதி.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM