நேபாளத்தில் இடம்பெற்ற 6ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 'அட்டிய பட்டயா ' போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்த இலங்கை அணியில் விளையாடிய மஸ்கெலியா கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த போட்டியில் ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த செல்வி எம்.மேனகாதேவி மற்றும் பெரிய சூரியகந்தை தோட்டத்தைச் சேர்ந்த ஜீ.ரொஷானி ஆகிய இருவரையும் மலையக மக்கள் கலாச்சார அமைப்பினால் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 320I ஓல்டன் பிரிவு கிராம சேவகர் சுரேஸ்,டிசைட் தமிழ் வித்தியாலய அதிபர் எஸ்.பிரபானந்தன்,புளும்பீல்ட் தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் விஜயகோபால் மற்றும் மலையக மக்கள் கலாச்சார அமைப்பின் உறுப்பினர்களுடன் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த இரு வீராங்கனைகளுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.