பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பை சார்ந்த 119 பேர் உட்பட சந்தேகத்தின் பேரில்   8,559 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

பங்களாதேஷில் அண்மைக் காலமாக  இடம்பெற்று வருகின்ற மரணங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த பாரிய தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தடை செய்யப்பட்ட அமைப்பானது, கடந்த காலங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மற்றும் அந்நாட்டிலுள்ள இந்து பூசகர்களை தாக்கிய சம்பவங்களில் தொடர்புப்பட்டவர்கள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் 1500 மோட்டார் சைக்கிள் ஆகியன கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.