48 நாடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச ஒன் அரைவல் விசா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலுக்கு பின்னர் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியினை கருத்திற்கொண்டே தற்போது 48  நாடுகளுக்கான இலவச வீசா வழங்கும் காலத்தை 3 மாதத்திற்கு நீடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.