அவசியமற்ற அரசியல் தலையீடுகள் பாடசாலையின் வளர்ச்சியை குழப்புகின்றன - இலங்கை ஆசிரியர் சங்கம்

Published By: Digital Desk 4

13 Feb, 2020 | 12:36 PM
image

யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் கட்டமைப்பில் - அவசியமற்ற அரசியல் தலையீடு உட்புகுந்து அந்தப் பாடசாலையின் வளர்ச்சி நிலையைக் குழப்பிவருவதாகவும் - அரசியல் தலையீட்டை நீக்கி - பாரபட்சங்களை இல்லாதொழிக்கவில்லையாயின் - தொழிற்சங்க நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும்.

 என இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆளுநர் ,வடமாகாண கல்வியமைச்சு, வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு - கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தமது இந்தக் கோரிக்கையை – அவர்களால் செய்யப்பட்ட பல முறைப்பாடுகளை இழுத்தடிப்புச் செய்வது போன்று மேற்கொள்ள முயலுவீர்களாயின் - இதன் மூலம் ஏற்படும் - வடமாகாண கல்விக் கட்டமைப்பின் சீர்குலைவுக்கு – வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வித் திணைக்களமும் குறித்த அரசியல் வாதிகளுமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் மிகவும் பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் மைதானம் தொடர்பாக உள்ள பிணக்கை ஆரம்பத்திலேயே தீர்க்குமாறும் - வடமாகாண கல்வியமைச்சுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கும் எழுத்துமூலம் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தோம். அதன் பின்னரும் - முன்னாள் ஆளுநர்களுக்கும் தெரிவித்திருந்தோம். அப்போது நடவடிக்கை எடுக்காத வடமாகாண கல்வியமைச்சினதும், வடமாகாண கல்வி திணைக்களத்தினதும் செயற்பாடு காரணமாக குறித்த பாடசாலை பாரிய குழப்பநிலையை அடைந்திருக்கிறது.

இந்த குழப்ப நிலைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் -ஆசிரியை ஒருவருக்கு முறையாக இடமாற்றச் சபையூடாக வழங்கப்பட்ட வெளிமாவட்ட இடமாற்றங்களை அரசியல் செல்வாக்குகளினூடாக இரு வருடங்கள் தொடர்ச்சியாகப் பிற்போட்டு அந்த இடமாற்றம் - பின்னர் கோப்பாய் கோட்டத்துக்கான இடமாற்றமாக மாற்றப்பட்டுள்ளது. 

ஆனால் - தற்போது கோப்பாய் கோட்ட பாடசாலையொன்றுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தைக் கூட அரசியல் செல்வாக்கின்மூலம் சவாலுக்கு உட்படுத்தி - முழுக் கல்விக் கட்டமைப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதையும், அதற்கு உடந்தையாக வடமாகாண கல்வியமைச்சும் செயற்பட்டு வருவதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இடமாற்ற மேன்முறையீடுகளின் போது குறித்த ஆசிரியை தான் கற்பித்திராத பாடத்துறையில் 100 வீதம் சித்திபெற்றுக் கொடுத்ததாக உரிமைகோர முயன்றதையும், இதனைப் போன்று பொய்யான காரணங்களையே மேன்முறையீடுகளில் தெரிவித்தும் அதிகாரிகளையும், இடமாற்றச்சபையையும் ஏமாற்றியுமுள்ளமை தொடர்பாக தற்போது ஆதாரபூர்மான தரவுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

யாழ்.மாவட்டங்களிலிருந்து பதிலீடான சேவையை மேற்கொள்ளும் தேவை கருதி - 44 வயதுக்குட்பட்ட பெண் ஆசிரியர்கள் பலரும் - பல குடும்பச்சுமைகளின் மத்தியிலும் வெளிமாவட்டங்களுக்கு சென்று பணியாற்றுகின்றனர். ஆனால் குறித்த ஆசிரியை போன்றவர்கள் - வயது குறைந்த நிலையிலும் அரசியல்வாதிகளை வைத்து கல்வித்துறையில் அரசியல் செய்வதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கிறது.

வெளிமாவட்ட சேவையை பூர்த்தி செய்யாது அரசியல்வாதிகளின் தயவில் இருக்கும் குறித்த ஆசிரியைக்கு முன்னர் வழங்கிய வெளிமாவட்டத்துக்கான பதிலீட்டு இடமாற்றம் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்பதை இலங்கை ஆசரியர் சங்கம் வலியுறுத்துகின்றது. இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் - இந்த இடமாற்றம் சீர்செய்யப்படும்வரை யாழ்.மாவட்டங்களிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பதிலீடாக அனுப்பப்படும் ஆசிரிய ஆளணியை அனுப்புவதற்கு, வடமாகாண கல்வியமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற முடிவை இலங்கை ஆசிரியர் சங்கம் எடுத்துள்ளது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

ஒரு மாத காலத்துக்குள் - குறித்த ஆசிரியையின் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் - வெளிமாவட்டங்களிற்கு -யாழ்.மாவட்டத்திலிருந்து பதிலீடாக அனுப்பப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் திரட்டி - உடனடியாகவே சொந்த வலயங்களுக்கே இடமாற்றம் வழங்கக்கோரி - தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் - போராட்டங்களில் ஈடுபடும் சந்தர்ப்பம் ஏற்படுமாயின் - ஆசிரியர்களுக்கு நாம் வழங்கும் உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வத்தளை துப்பாக்கிச் சூடு ; இந்தியாவுக்குத்...

2026-08-14 09:28:27
news-image

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை –...

2026-08-14 09:18:30
news-image

இன்றைய வானிலை 

2026-08-14 09:17:07
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08