ஆராச்­சிக்­கட்டு பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மீனவக் கிராமம் ஒன்றில் 14 வய­து­டைய பாட­சாலை மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கிய அதே பிர­தே­சத்தைச் சேர்ந்த 20 வய­து­டைய இளை­ஞரை நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­துள்­ள­தாக ஆராச்­சிக்­கட்டு பொலிஸார் தெரி­வித்­தனர்.  பாதிக்­கப்­பட்ட சிறு­மியின் அயல்­வீட்­டுக்­கா­ர­ரான இளை­ஞனே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

பாதிக்­கப்­பட்ட சிறுமி தனது தாயுடன் இரவு உறங்கிக் கொண்­டி­ருந்த போது கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேகநபர் சிறு­மியை எழுப்பி வீட்­டுக்கு வெளியில் அழைத்துச் சென்­றுள்­ள­தா­கவும், தாய் எழும்பிப் பார்த்த போது தனக்­க­ருகில் படுத்­தி­ருந்த தனது மகளைக் காணாது திடுக்­கிட்டு அச்­சத்தில் அலறிக் கொண்டு மகளைத் தேடி­யுள்­ள­தா­கவும், பின்னர் வீட்­டுக்கு வந்த சிறுமி நடந்த விட­யங்­களைத் தாயிடம் கூறி­ய­தை­ய­டுத்து தாய் இது தொடர்பில் முறைப்­பாடு செய்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இம்­மு­றைப்­பாட்­டை­ய­டுத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் குறித்த இளை­ஞரைக் கைது செய்­துள்­ள­தோடு, பாதிக்கப் பட்ட சிறுமியை வைத்திய பரிசோத னைக்காக சிலாபம் வைத்தியசாலை யில் அனுமதித்துள்ளனர்.