84 வயதான ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா, சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகத் தனது மத போதனைகளை நிறுத்தியுள்ளதாகத் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The Dalai Lama is playing it safe.

கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவிலும், பல உலகநாடுகளிலும் மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா எதிர்காலத்தில் தான் மேற்கொள்ளவிருந்த தனது அனைத்து மக்கள் சந்திப்புக்களையும், மத போதனைகளையும் நிறுத்தியுள்ளதாக தனது  உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிவித்துள்ளார்.