இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சர் நகரைச் சேர்ந்தவர் நிரஞ்சன் பட்னாகர் (63). அவர் அப்பகுதியில் இசைப் பாடசாலையொன்றை நடத்தி வருகிறார். அவரிடம் ஏராளமான மாணவ, மாணவிகள் இசை பயின்று வருகின்றனர்.

தனது இசைப் பாடசாலைக்கு வரும் மாணவிகளை நிரஞ்சன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவிகளிடம் அநாகரிகமாக பேசியுள்ளாதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  குறித்த ஆசிரியரை நேற்று மாணவிகள் கும்பலாக சேர்ந்து அடித்து உதைத்தனர். மாணவிகளிடம் இருந்து தப்பிக்க அவர் வீதிக்கு ஓடிவந்துள்ள போதும் அங்கேயும் அவரை விரட்டி வந்த மாணவிகள் அவரது ஆடைகளை கிழித்து சரமாரியாக தாக்கினர். 

தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆசிரியரை மீட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் பொலிஸாரிடம் புகார் அளித் துள்ளனர். மாணவிகள் அளித் துள்ள புகாரில், மிக நீண்ட காலமாக ஆசிரியர் நிரஞ்சன் தங்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆசிரியர் நிரஞ்சன் மறுத்துள்ளதோடு அவர் அளித்துள்ள புகாரில், என்னிடம் படிக்கும் மாணவிகளை என் பேரக் குழந்தைகள் போலவே நடத்தினேன். குறிப்பிட்ட சில மாணவிகள் கட்ட ணத்தை செலுத்தவில்லை. அவர்களிடம் பணம் கேட்டபோது அடித்து உதைத்தனர் என்று தெரிவித்துள்ளார்.