இலங்கையுடன் தொடர்ந்து நல்லுறவை பேணுவதற்கு குறிப்பாக  பொருளாதாரம், தொழினுட்பவிருத்தி, மற்றும் கல்வி உள்ளிட்ட பல்துறை விருத்திக்கு இஸ்ரேல் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமென இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ரொன் மல்கா தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் தூதுவருக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.

இலங்கையுடன் தொடர்ந்து நல்லுறவைல பேணுவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர்  தெரிவித்தார்.

தேசிய  பொருளாதாரம் மேம்படுத்த வேண்டுமாயின் தேசிய உற்பத்திகள் முன்னேற்றமடைய வேண்டும்.

விவசாயத்தில் ஈடுப்படும் விவசாயிகள் பல காலமாக வறுமைக்கோட்டில் வாழ்கின்றார்கள்.

இளம் தலைமுறையினர் விவசாயத்தை ஒரு தொழிலாக செய்வதை விரும்புவதில்லை.

இந்நிலைமை மாற்றியமைக்கபடுதல் அவசியம். விவசாயத்துறைக்குள் நவீன தொழினுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அதிக இலாபம் பெறும் தொழில்துறையாக விவசாயத்தை பலப்படுத்த வேண்டும்.இதற்கு புதிய தொழினுட்ப விருத்திகளின்  தேவை அவசியம் என  ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

விவசாயத்துறையில் தற்போது உள்ள மாற்றங்களை காட்டிலும். தனது நாட்டில் செயற்பாட்டில் உள்ள விதிமுறைகளையும்.    விவசாயத்துறைக்கு வழங்குவதுடன், கல்வி மற்றும் தகவல் தொழிற்துறை  விருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பினையும் வழங்குவதாகவும். இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.