வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகளுக்கு உடனடியாக தொழில்வாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சுகாதர அமைச்சுக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் வைத்திய சங்கம் மற்றும் வேலையற்ற சித்த மருத்துவ பட்டதாரி வைத்திய சங்கத்தினரால்  இந்த போராட்டம் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது இதில் ஏராளமான வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் கலந்து கொண்டு அரசங்கதிரற்கு எதிரான தங்களின் எதிர்ப்பையும், தங்களின் கோரிக்கையையும் வெளிக்காட்டியிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டம் தொடர்பில் வேலையற்ற சித்த மருத்துவ பட்டதாரி வைத்திய சங்கத்தின் தலைவர் இராசரத்தினம் சுகந்தன் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் ஆயுர்வேத மருத்துவத்தில்ஆறு வருட கல்வியை நிறைவு செய்து  மூலம் பட்டம் பெற்றுள்ளோம் இருந்தும் கடந்த மூன்று வருடங்களாக எங்களுக்கு வைத்திய நியமனங்கள் வழங்கப்படவில்லை.

அரசாங்கத்தின் பலத்தரப்பினரோடு நாங்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தாலும் எதிலும் எங்களுக்கான தீர்வு கிடைக்கப்பெற வில்லை. தற்போது முழுமையாக ஆயுர்வேதத்தினை கற்று படம் பெற்ற 674 ஆயுர்வேத வடித்தியர்கள் இருக்கின்றனர் இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள்  தங்கள் மருத்துவ கல்வியை முடித்து மேலும் 300 பட்டதாரிகள் பல்கலைகழகங்களில் இருந்து வெளியேற உள்ளனர்.

தற்சமயம் வரை நாட்டில் 300க்கும் மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் அதற்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை. நாட்டில் வேலைவாய்ப்பற்ற 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதிலும் எங்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை வேலையற்ற ஆயுர்வேத வைத்தியர்கள் தற்போது 1.2 வீதம் மாத்திரமே உள்ளனர் எனினும் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்று தருவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை.

ஆயர்வேத பட்டதாரி வைத்தியர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கவிருப்பதாக அராசாங்கம் தீர்மானித்துள்ள கருத்தை நாங்கள் ஒரு போதும் ஏற்கப்போவதில்லை ஆறு வருடங்கள் விஞ்ஞான துறையில் கல்வி கற்ற எங்களின் தரத்தை குறைப்பதற்கான முயற்சியினை மேற்கொள்கின்றனர்.

எங்களின் கோரிக்கைளை இதற்கு மேலும் நிராகரிக்கப்பட்டால் நாங்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோம்.