சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள 2 பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருள் பிரேசிலில் இருந்து கடத்திவரப்பட்டுள்ளதுடன் இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்  91 கிலோகிராம் நிறையுடையதென சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் தளத்திலிருந்து இந்த கொக்கெய்ன் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சீனி என்ற போர்வையில் பதிவுசெய்து குறித்த போதைப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கொள்கலனின் உட்பகுதியிலிருந்து மூன்று பயணப் பைகளில் குறித்த பொதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.