இரு வேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி

Published By: R. Kalaichelvan

12 Feb, 2020 | 04:48 PM
image

மெதகம மற்றும் குருணாகல் பகுதிகளில்  நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெதகம

மெதகம பகுதியில் மொனராகலை - பிபில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பிபில 15ஆம் கட்டைக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று  கெப் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

அமுனேகதுர - பகினிவெல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்துக்குக் காரணமான கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குருணாகல்

குருணாகல் தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் தேசிய வைத்தியசாலைக்கு முன்னுள்ள வீதியில் சென்ற துவிச்சக்கர வண்டியொன்று அதற்கு முன்னால் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது  துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் வீதியின் நடுவில் விழுந்ததையடுத்து லொறியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

குருணாகல் - மல்லவப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51