நீதிமன்ற தலையீடு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுனமன்ற உறுப்பினர்  ரஞ்சன் ராமநாயக்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன் அவரை தொடர்ந்தும் இம்மாதம் 26 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை நுகோகொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே அவருக்கு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கடந்த தை மாதம் 14 ஆம் திகதி மாதிவெலயிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்தனர்.