(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலுக்கான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உத்தேச கூட்டணியின் இணைத்தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரவில்லை.

இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினைவாத த்தினை ஏற்படுத்தவே இவ்வாறான சோடிக்கப்பட்ட கருத்துக்கள் பகிரப்படுகின்றதாக தெரிவித்த அரசாங்கத்தின் பேச்சாளரும் முதலீட்டு ஊக்குவிப்பு  இராஜாங்க அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல

பதவி காலம் முடிந்ததும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்ட  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன    பொதுத்தேர்தலில் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிட போவதாக குறிப்பிடுகின்றார்.

அவ்வாறாயின் 2015ம் ஆண்டு குறிப்பிட்ட  விடயங்களில் மாற்றம்  ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இடம் பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமைக்கவுள்ள உத்தேச  கூட்டணியில் இணைத்தலைவர் பதவி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட வேண்டுமென கூறுவது சோடிக்கப்பட்ட ஒன்று. சுதந்திர   கட்சியினரிடமிருந்தோ, அல்லது  அக்கட்சின்  தலைவரிடமிருந்தோ அவ்வாறான எந்தவொருக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் பொலன்னறுவையிலிருந்து ஆட்சி செய்யப்போவதாகக் கூறினார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.மேலும் தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை எனவும் அந்நிகழ்வில் மைத்திரி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபா சிறிசேன அரசியலுக்கு வந்தால் அன்று தான் அறிவித்திருந்தது தவறெனவும் அரசியலுக்கு  மீண்டும் வரக்கூடாதென தனக்கிருந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாகவும் மைத்திரிபால சிறிசேன    கூற வேண்டும்.

ஏனைய நாடுகளுடன் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கைகளால் நாட்டினுடைய தேசிய வளங்கள் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படும் நாட்டின் அதிகாரத்துக்குள் வருமாக இருந்தால் அவ்வாறான உடன்படிக்கைகளை ஒருபோதும் செய்துகொள்ள மாட்டோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.