உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலைத் தரும் புரோமோரொபட் என்ற 1.5 அடி உயர ரோபோவொன்று அமெரிக்க நியூயோர்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்த ரோபோவானது டைம்ஸ் சதுக்கம் முழுவதும் நகர்ந்து எதிர்ப்படும் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அளித்ததுடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளிப்பதில் ஈடுபட்டது.
இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் அந்த ரோபோவின் மார்பில் பொருத் தப்பட்டிருந்த ஐபாட் உபகரணம் போன்ற தொடுகையுணர்வுள்ள திரையைக்கொண்ட உபகரணத்தில் சிறிய கேள்விகளை பதிவேற்றம் செய்தும் அந்த ரோபோவுடன் உரையாடியும் கொரோனா வைரஸ் தொடர்பான தமது சந்தேகங்களுக்கான பதில்களை அறிந்து கொள்வதில் ஈடுபட்டனர்.
ரஷ்ய குழும நிறுவனமொன்றால் செயற்படுத்தப்படும் வர்த்தகங்களுக்கான ரோபோ சேவைகளை வழங்கி வரும் பிலடெல்பியாவை அடிப்படையாகக்கொண்ட நிறுவனத்தால் புரோமோரொபட் உருவாக்கப்பட்டிருந்தது.
''கொரோனா வைரஸ் நோயறிகுறிகளைக் கண்டறியக்கூடிய விசேட மென்பொருளொன்றை நாம் உருவாக்கியுள்ளோம்'' என அந்தக் கம்பனியின் வர்த்தக அபிவிருத்தி அதிகாரியான ஒலெக் கிவோகுட்சேவ் தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் மக்கள் எவ்வளவு தூரம் அச்சமடைந்துள்ளனர் என்பதை உணர்ந்தே இந்த ரோபோவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
எனினும் இந்த ரோபோ கொரோனா வைரஸ் தொற்றை நேரடியாக கண்டுபிடிக்காது எனவும் அது தனது திரையில் காண்பிக்கப்படும் சிறிய கேள்விகளுக்கு பயன்பாட்டாளர்கள் அளிக்கும் ஆம் அல்லது இல்லை என்ற பதில்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்ற உத்தேச மதிப்பீட்டை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இவ் ரோபோவின் செயற்பாடு தற்போதைய சூழ்நிலையில் அவசியமற்றுது என கருதியமையாலும் குறித்த ரோபோ முறையான அனுமதியை பெறவில்லை என்பதாலும் அது தற்போது நியூயார்க் பூங்காவிலிருந்து அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM