சீன ஜனா­தி­பதி ஸி ஜின்பிங், பீஜிங் நக ரில் கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் டிடான் மருத்­து­வ­ம­னைக்கு  நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை விஜயம் செய்து அங்­குள்ள மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் சந்­திப்பை மேற்­கொண்டார்.

இதன்­போது ஜனா­தி­பதி கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்து பாது­காப்பைப் பெறும் வகையில்  மருத்­துவ முக­மூ­டியை அணிந்­தி­ருந்­தமை அனை­வ­ரதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

அத்­துடன் அவர் இந்த விஜ­யத்தின் போது கொரோனா வைரஸால் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள வுஹான் நக­ரி­லுள்ள  மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் நேரடி  காணொளி காட்சி வச­தி­யைப் பயன்­ப­டுத்தி உரை­யா­டினார்.

மேலும் அவர் முக­மூ­டி­ய­ணிந்­த­வாறு பிராந்­திய சமூக சுகா­தார நிலை­யத்­துக்கும் விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார். இதன்போது  ஸி ஜின்பிங்கின் உடல் வெப்பநிலை மருத் துவர்களால் பரிசோதிக்கப்பட்டது.

மேற்படி வைரஸ் தொற்றின் பிரதான நோயறிகுறியாக உடல் வெப்பநிலை அதிகரித்தல் (காய்ச்சல்), இருமல் மற்றும் சுவாசப்பிரச்சினைகள் என்பன உள்ளன.

இதன்போது அந்த சமூக நிலையத்துக்கு வெளியே முகமூடியணிந்த வண்ணம்  காணப்பட்ட மக்களுடன் உரையாடிய ஜனா திபதி, இந்த நோய் தொற்றுக்கு எதிராகப் போராடி வெல்வோம் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார். சீன முறைமை மற்றும் ஆட்சி செய்வதற்கான வல்லமை குறித்து பிரதான பரீட்சையாக இந்த வைரஸ் தொற்று உள் ளதாக அவர்  கூறினார்.

ஆரம்பத்தில் இந்த வைரஸ் தொற்றை இரகசியமாகப் பேண முயன்றமை மற்றும் அது தொடர்பில் குறைத்து மதிப்பீடுகளை வெளியிட்டமை என்பனவற்றின் மூலம் சீன தலைமைத்துவம் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் மேற்படி விவகாரம் தொடர்பில் குறைபாடுகள் இருந்ததை சீன அரசாங்கம் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனமானது கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சீனா நோயாளிகளை தனி மைப்படுத்தும் நடவடிக்கையை பாரிய அளவில் மேற்கொண்டு வருகின்றமை குறித்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.