நெதர்லாந்தின் இரு வேறு பகுதிகளில் உள்ள தபால் பரிவர்த்தன நிலையங்களில் இரு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் வெடிப்பு சம்பவமானது ஆம்ஸ்டர்டாம் நகர மையத்தின் வணிகஸ்தலத்தில் உள்ள தபால் பரிவர்த்தன நிலையத்தில் அந் நாட்டு நேரப்படி இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து 120 மைல் தொலைவில் அமைந்துள்ள கெர்கிரேட் நகரில் 30 நிமிடங்களின் பின் அடுத்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி இரு வெடிப்பு சம்பவங்களிலும் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அந் நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தபால் பொதியில் இணைக்கப்பட்ட குண்டுகளே, இவ்வாறு வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

photo credit : twitter