தனியார் பஸ்களுக்கு தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் (11) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய வீதி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான போக்குவரத்து பொலிசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இரவு மட்டக்களப்பு கொழும்பு வீதியில் கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ் வண்டிகளை சோதனையிட்டனர்.

இதன் போது இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப் பத்திரம் இல்லாமல், மற்றும் அனுமதிப் பத்திர வீதி சட்ட திட்டங்களை மீறி அக்கரைப்பற்று, நிந்தவூர், காத்தான்குடி, கல்முனை மட்டக்களப்பு பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற 10 தனியார் பஸடகளின் சாரதிகளை கைது செய்து பஸ்களை தடுத்துவைத்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சாரதிகளை இன்று செவ்வாய்க்கிழமை (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களுக்கு தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் செலுத்துமாறும். பொலிசார் இவ்வாறு வீதி சோனை நடவடிக்கையை மேற்கொண்டு அனுமதிப் பத்திரம் இல்லாது பயணிகளை ஏற்றுச் செல்லும் பஸ்களின் சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.