இலங்கை போன்ற நாடுகளில் வினைத்திறன் வாய்ந்த பொதுத்துறையை உருவாக்குவது மற்றும் அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கு திறன் விருத்தி செயற்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இலங்கையின் பொருளாதார செயற்பாட்டில், வினைத்திறன் வாய்ந்த பங்காளர் எனும் வகையில், ஜப்பான் சர்வதேச கூட்டாண்மை முகவர் அமைப்பு (JICA), நாட்டின் பொதுத்துறைக்கு பெறுமதி வாய்ந்த பங்களிப்பை வழங்கும் முகமாக, வளங்களை கட்டியெழுப்புதல் மற்றும் திறன் விருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது.
மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக ஜப்பானிய மானிய உதவி என்பதன் மூலமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் நிதி உதவி வழங்கப்பட்டு, JICA இனால் நடைமுறைப்படுத்தப்படும் இளம் திறமை வாய்ந்த மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கு புகழ் பெற்ற ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
JDS திட்டத்தின் கீழ், 231 மில்லியன் யென் (சராசரியாக 318 மில்லியன் ரூபா ) தொடர்ச்சியான நிதி உதவி வழங்கல் உடன்படிக்கையில், JICA வின் பிரதம பிரதிநிதி கியோஷி அமடா மற்றும் நிதி அமைச்சின், திறைசேரியின் செயலாளர் கலாநிதி. ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் கைச்சாத்திடவுள்ளதுடன், இந்நிகழ்வு இம்மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த உடன்படிக்கையை இலங்கைக்கான ஜப்பானிய உயர் ஸ்தானிகர் கே.சுகனுமா மற்றும் கலாநிதி. ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் மற்றும் JICA இடையிலான இந்த உடன்படிக்கை மூலமாக உள்நாட்டு பொதுத் துறையில் மனித வளங்கள் திறன் அபிவிருத்தி மற்றும் நிறுவனசார் கட்டியெழுப்பல் செயற்பாடுகள் போன்றன மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் பரஸ்பர இணைவுகளை ஏற்படுத்தவும் மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
இந்த ஆண்டும், JDS இன் கீழ் JICA மற்றும் ஜப்பானிய தூதுவராலயம் ஆகியவற்றின் இணை கழகத்தின் மூலமாக பொருத்தமான 15 அரசாங்க அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு, ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் இரு ஆண்டுகளுக்கு பொது கொள்கை மற்றும் நிதியியல், பொருளாதாரம் உள்ளடங்கலாக பொருளாதாரம், வணிக முகாமைத்துவம், சூழல் முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றில் முதுமாணிப் பட்ட புலமைப்பரிசில் நிகழ்ச்சிகள் வழங்கப்படவுள்ளன.
JICA இன் பிரதம பிரதிநிதி கியோஷி அமடா கருத்துத் தெரிவிக்கையில்,
“எந்தவொரு நாட்டினதும், சமூக - பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு திறன் அபிவிருத்தி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கையின் அபிவிருத்தி சூழலில் JICA வின் தொடர்ச்சியான ஈடுபாடு என்பது அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்த JDS புலமைப்பரிசில் மூலமாக பங்குபற்றுநர்களுக்கு அவசியமான நிபுணத்துவ அறிவு, நிபுணத்துவ வலையமைப்புகளை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்றவற்றை பின்தொடர்ந்து நாட்டின் சமூக மற்றும் பொருளாதார செயற்பாடுகளுக்கு பங்குபற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல், இந்த நிகழ்ச்சித்திட்டத்தினூடாக 90 இலங்கை அரச ஊழியர்கள் அனுகூலம் பெற்றுள்ளனர். இந்த கற்கைகளை தொடர்ந்தவர்கள் தலைமைத்துவ நிலைகளை பேணக்கூடிய திறனை கொண்டவர்களாக இருப்பார்கள். மொத்தமாக 120 அதிகாரிகள் இந்த திட்டத்தின் கீழ் புலமைப்பரிசில்களை பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான் சர்வதேச கூட்டாண்மை முகவர் அமைப்பு (JICA):
என்பது ஜப்பானின் பரஸ்பர உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை நடைமுறைப்படுத்தும் முகவர் (ODA) அமைப்பாக உள்ளது.
உலகின் மாபெரும் பரஸ்பர உதவி முகவர் அமைப்பு என்பதுடன், 150 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. “Inclusive and Dynamic Development,” எனும் நோக்கத்துக்கமைய, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலமைந்துள்ளது.
இலங்கையில், 1954 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிய வண்ணமுள்ளது. நாட்டுக்கு நிதி உதவிகளை வழங்கும் நன்கொடை நாடுகளில் முக்கிய ஒன்றாக அமைந்துள்ளது.
ஜப்பான் மக்கள் சார்பாக, JICA இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM