சீனாவில் முக்கிய அதிகாரிகள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கையாண்ட விதம் குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அதிகாரிகளே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹூபேய் சுகாதார ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் குறித்த ஆணைக்குழுவிற்கான கட்சியின் செயலாளர் ஆகியோரும் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரினதும் பதவி வெற்றிடத்திற்கு, தேசிய பிரமுகர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளரும் பதவியிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ள நிலையில், சீனா இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.