ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தில் முதன் முறையாக இராணுவ வீராங்கனையொருவர்  அழகு ராணியாக முடிசூடப்பட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் கட்டளை அதிகாரியான 26 வயதுடைய டெசவ்னா பாபர் என்னும் குறித்த பெண்ணே அழகு ராணியாக முடிசூடப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கறுப்பினத்தவர்களுள் ஒருவரான குறித்த பெண் கொலம்பியா பிராந்தியத்தின் சார்பில் அமெரிக்க அழகு ராணிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 

இதேவேளை, குறித்த இப்பெண்ணின் தாய், தந்தை மற்றும் சகோதரனும் இராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.