தளபதி விஜய் நடிப்பில் தயாராகிவரும் ‘மாஸ்டர்’ படத்தின் முதல் பாடல் காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதியன்று மாலை 5 மணி அளவில் வெளியாகிறது.

மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் விஜயுடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘பேட்ட’ படப்புகழ் நடிகை மாளவிகா மோகனன், நடிகை ஆண்ட்ரியா, ‘கைதி’ புகழ் அர்ஜுன் தாஸ், நாசர், தீனா, ரமேஷ் திலக், ரம்யா சுப்ரமணியன், பிரேம், அழகம் பெருமாள், 96 புகழ் நடிகை கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார்.

ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி அன்று மாலை 5 மணி அளவில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘ஒரு குட்டி கத...’ என தொடங்கும் அந்த பாடலுக்கு ரசிகர்களிடம் தற்போதே பெரும் எதிர்பார்ப்பிற் குள்ளாகி இருக்கிறது.

இதனிடையே தளபதி விஜய் நெய்வேலியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது அவரை காண திரண்ட ரசிகர்களுடன் எடுத்த செல்பி உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.