72 ஆவது தேசிய சுதந்திர தினத்துக்கு அமைவாக 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஒரு வார கலத்துக்கு பொது மன்னிப்புக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கு அமைவாக கடமைக்கு திரும்பாத முப்படை வீரர்களும் சட்டபூர்வமாக கடமையில் இருந்து விலகுவதற்கு அல்லது மீண்டும் சேவையில் இணைவதற்கு பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று  குறித்த பொது மன்னிப்பு காலம் முடிவடைந்துள்ளதோடு , இது வரை 6 தினங்களுக்குள் 13 அதிகாரிகளும், 6,259 அலுவலர்களும் சேவைக்கு திரும்பியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.