ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாகக் தன்னைக் காட்டிக்கொண்டு கந்தளாய் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயை இவ்வாறு மோசடி செய்ததாக கூறப்படுகின்றது.

குறித்த நபர் தொடர்பில் கிடைக்பெற்ற முறைப்பாட்டையடுத்து, கந்தளாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சாவஸ்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை, கந்தளாய் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை(14) ஆஜர்ப்படுத்த கந்தளாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  கந்தளாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.