எம்மில் பலரும் அறிமுகமற்றவர்களின் சந்திப்பின் போதும் அல்லது நேர்காணலின் போதும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று தொண்டை அடைத்துக் கொள்ளும். சிலருக்கு தொண்டையில் வலி ஏற்படும். பேச்சு வராது. சிறிது நேரம் கழித்து தான் பேச்சு வரும். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

அடிக்கடி சளி பிடிப்பது, மூக்குத் தண்டு இயல்பான அமைப்பில் இல்லாமல் சற்று வளைந்து இருப்பதால் மூக்கடைப்பு ஏற்படுவது, மூக்கு பகுதியில் உள்ள சைனஸ் காற்றறைகள் பாதிக்கப்பட்டு அந்த அறை களில் சீழ் பிடிக்கும். அத்தகைய தருணங்களில் தேங்கிய சீழானது மூக்கு மற்றும் தொண்டையில் பின் பக்கமாக வடிந்து, தொண்டையில் மெல்லிய சுவர்களை பாதித்து, அங்கு ஒவ்வாமையை உண்டாக்கு கிறது. இதன் காரணமாக தொண்டைப் பகுதியில் உள்ள டான்சில் கட்டிகள் பாதிப்படைந்து தொண்டை யில் வலி ஏற்படுகிறது. இத்தகைய தருணங்களில் பீட்டா ஹீலாமடிக் ஸ்டெப்டோகாக்கி ( Beta Heamolitic Streptococcai) எனப்படும் கிருமிகள் அப்பகுதியில் அதிகரித்து, அதன் காரணமாக குருதி நச்சுத்தன்மை அடைகிறது.

மேல் சுவாச குழாயில் அடிக்கடி தொற்று உண்டானால் இத்தகைய பாதிப்பு ஏற்படும். இதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், இந்த நச்சுத்தன்மை கால் பகுதி, மூட்டு பகுதி, இதயம் மற்றும் சிறுநீரகங்களை நிரந்தரமாக பாதித்துவிடும். சிலருக்கு இதன் காரணமாக உயிரிழப்பும் ஏற்படலாம்.

அடிக்கடி தொண்டை வலி, உணவு விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், கரகரப்பு, உமிழ்நீர் இயல்பான அளவை விட அதிகளவில் சுரப்பது போன்ற பல்வேறு அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக இதுகுறித்து வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுக்குப் பின் தொடர் வைத்திய சிகிச்சை மூலமாக பாதிப்பு தொடக்க நிலையில் இருந்தால் குணப்படுத்தலாம். சிலருக்கு நவீன சைனஸ் சத்திரசிகிச்சை மூலம் மூலமாகவும், டான்சில் சத்திரசிகிச்சை மூலமாகவும் இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபடலாம்.