கொரோனா வைரஸால் பரவும் நோய்க்கு புதிய பெயரிட்டது உலக சுகாதார ஸ்தாபனம் ! காரணத்தையும் தெரிவித்தது !

Published By: Priyatharshan

12 Feb, 2020 | 07:12 AM
image

கொரோனா வைரஸால் பரவும் புதிய நோய்க்கு உலக சுகாதார ஸ்தாபனம் “கொவிட்-19”  (Covid-19)  என்ற புதிய பெயரிட்டுள்ளது.

Photograph by Reuters

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரத்தில் கடந்த வருட இறுதியில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது.

குறித்த கொரோன வைரஸ் உலகம் நாடுகள் முழுவதும் பரவிய நிலையில், நேற்றைய நிலவரப்படி இதுவரை 1017 பேர் உயிரிழந்துள்ளதுடன் 42,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பரவும் நோய்க்கு 'கொவிட்-19’ என புதிய பெயர் ஒன்றை ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனம் நேற்றையதினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

கொரோனா (Corona) வைரஸ் (virus) நோய் (disease) மற்றும் வைரஸ் பரவிய ஆண்டான 2019 ஆகியவற்றை இணைத்து கொவிட்-19 (Covid-19) என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர் எந்த ஒரு புவியியல் இடத்தையோ, தனி நபரையோ, ஒரு குழுவையோ அல்லது விலங்குகளையோ குறிப்பிடாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே கொரோனா வைரஸுக்கு கொவிட்-19 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08