(இராஜதுரை ஹஷான்)

சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் போலியான குற்றச்சாட்டுக்களையே அமைச்சர் விமல் வீரசன்ச தொடர்ந்து முன்வைத்து வருவதாக பாராளுமன்ற ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

அத்துடன் போலியான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் 14  நாட்களுக்குள்  நிரூபிக்க வேண்டும். அல்லது பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிடின் 100 கோடி ரூபா கோரி அவதூறு  வழக்கு தொடுப்பேன் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில்  உள்ள  அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.