சட்ட விரோதமான முறையில் வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியதுடன் 3 சந்தேக நபர்களும்  கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மாலை மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை கொழும்பு வீதியில் வைத்து இவை கைப்பற்றப்பட்டதாகவும் இதற்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற காரும் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 மன்னாரிருந்து கல்முனை பகுதிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர். இதன்போது 7 கிலோ 625 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்க்களையும் சந்தேக நபர்களையும் இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.