நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் குடிநீருக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை குடிநீர் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் 55,846 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 36 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பிரதேசங்களே அதிகளவில் குடிநீர் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதன் மூலம் பாதிப்புக்குள்ளான 10 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 

குடிநீர் சிக்கலுக்கு உற்பட்டவர்களுக்கு தண்ணீர்  தாங்கிகள் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி எஸ்.அப்புஆராச்சி தெரிவித்தார்.