காபூலில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தன் தலைநகர் காபூலில் பல மாதங்களுக்கு பின்னர் இடம்பெற்ற பெரிய தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

அரசாங்கத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு பல்கலைக்கழகமான மார்ஷல் பாஹிம் என்ற இராணுவ பயிற்சிக் கல்லூரியின்  நுழைவாயிலிலே இந்த தாக்குதலானது இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனால் இரண்டு பொது மக்களும் நான்கு இராணுவ வீரர்களும் அடங்கலாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பொது மக்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தானிய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க்கவில்லை. 

photo credit : Aljazeera