வட அயர்லாந்தின் லண்டனின் டெர்ரி நகரத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லைரா மெக்கீயின் வழக்கில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் இடம்பெற்ற கலவரமொன்றின் போது 29 வயதான ஊடகவியலாளரான லைரா மெக்கீ சுட்டுக்கொல்லப்ட்டமையை தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டனர்.

அத்தோடு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 பேரை கைதுசெய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மெக்கீயின் கொலை தொடர்பில் பயங்கராவத சட்டத்தின் கீழ் இன்று நான்கு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இன்று கைதுசெய்யப்பட்டவர்கள் 20, 27, 29 மற்றும் 52 வயதுடைய நான்கு ஆண்கள் என அயர்லாந்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் லைரா மெக்கீயின் கொலை தொடர்பில் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.