(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் இதய சின்னத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடைக்காது என சர்வதேச இராஜாங்க  உறவுகள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன் யானை சின்னத்திற்கும் இதய சின்னத்திற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் உண்டு. ஐக்கிய தேசிய கட்சியில்   தீவிரமடைந்துள்ள முரண்பாடுகளே பொதுத்தேர்தலில் தோல்வியை  பெற்றுக் கொடுக்கும் என்றும் அவர் கூறினார். 

பிரதமர்  அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொதுக்கூட்டணி விவகார  முரண்பாடுகள் இன்று  எதிர்தரப்பில் சூடுப்பிடித்துள்ளன. கட்சியின்    முரண்பாடுகள் ஆளும் தரப்பிற்கு பலம் சேர்க்கும் விதமாகவே அமையும் என்றும் அவர் இதன்போது கூறினார்.