சொக்லேட் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் யார்? எப்போது? எந்த அளவிற்கு சாப்பிட வேண்டும்? என்பதில்தான் இதன் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது என்கிறார்கள் வைத்தியர்கள்.
நாளாந்தம் சொக்லெட்டை அளவாக சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது என்று இதய நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஏனெனில் சொக்லெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் ‘கோக்கோ’வில் இதய நோய், புற்றுநோய், டிப்ரஷன் எனப்படும் மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க கூடிய ஆன்டிஆக்சிடன்ட்டான பாலிஃபீனால் உள்ளது என்கிறார்கள்.
ஆனால் சொக்லெட்டுகளில் பால் கலக்காத டார்க் சொக்லெட்டுகள் தான் உடல்நலத்திற்கு ஏற்றது. ஏனெனில் இத்தகைய சொக்லெட்டுகளில் தான் 70 சதவீத அளவிற்கு கோக்கோ இடம்பெறும். அதேபோல் சொக்லேட்டில் இருக்கும் கஃபைன், தியோபுரோமைன் போன்றவை நரம்பு மண்டலத்தையும், ரத்த ஓட்டத்தையும் தூண்டுபவை.
இதன்காரணமாக சொக்லேட் சாப்பிடுவதால் சோர்வு குறைந்து, சுறுசுறுப்பு உண்டாகும், சுவாசம் மற்றும் இதயம் சீராக செயல்படும், சொக்லேட் சாப்பிடுவதால் மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற ஹோர்மோன் சுரப்பியின் செயல்பாடு சீராக இருக்கும்.
சொக்லேட் சாப்பிடுவது நல்லதுதான் என்றாலும், அதனை இரவு நேரங்களிலும், இரவு உணவு முடித்த பிறகும் சாப்பிடுவது ஆபத்தான பின்விளைவை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM