தமிழ் மக்கள் நலனில் இந்தியா இதய சுத்தியுடன் செயற்படவேண்டும்  - ஆனந்தி சசிதரன் 

Published By: Digital Desk 4

11 Feb, 2020 | 02:15 PM
image

இந்தியா ஈழத்தமிழர்கள் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி ஆனந்தி சசிதரன் தமிழ் மக்கள் நலனில் இந்தியா இதய சுத்தியுடன் செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் மகிந்தவின் இந்திய விஜயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் இந்தியாவின் பூரண ஒத்துல்லைப்புடனேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இந்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.இந்திய பிரதமரின் இலங்கை மீதான அழுத்தம் எந்தளவுக்கு சாத்தியம் என்பது கேள்வியாகவே உள்ளது.

இந்தியா தனது பூகோள நலனை மட்டும் பற்றி சிந்தித்து செயற்படாது ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் கரிசனை காட்ட வேண்டும்.இந்தியா தனது வெளிவிககர கொள்கையை மாற்ற வேண்டும்.ஈழத்தமிழர்களாகிய எமது பிரச்சனைகள் உரிமைகள் தொடர்பில் உண்மை நிலைமையுடன் எம்முடன் பேச வேண்டும்.

வெறுமனே மத்திய அரசுடன் பேசுவதை விடுத்து எம்முடனும் பேச வேண்டும். இது தொடர்பில் இந்தியா இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.

இன்று போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகியும் எமக்கான இனப் பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியவில்லை.மேலும் போரின் பொது படுகொலை செய்யப்பட்வர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.காணமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள் ஆண்டாண்டு காலமாக வீதிகளில் போராடி கொண்டிருக்கின்றனர்.

இறுதி போரில் தாம் ஒப்படைத்த உறவுகளுக்கு உண்மையில் என்ன நடந்தது என்று அறியாது நீதி கிடைக்காது எத்தனையோ உறவுகள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இனியாவது சர்வதேசமும் இந்தியாவும் இதய சுத்தியுடன் செயற்பட்டு எமது இனப் பிரச்சனைக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47