உலகளாவிய ரீதியில் டுவிட்டர்,  டிக்-டொக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய முன்னனி சமூக வலை தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ள ஹேஸ்டெக் தான் “ப்ரூம்சலன்ஜ்“ (#broomchallenge). 

அதாவது, தும்புத்தடியை உதவியின்றி சுயமாக நிறுத்தி வைத்து பல்லாயிரம் பயனர்கள் காணொளிகளையும்  புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளனர். 

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெப்ரவரி 10 ஆம் திகதி அன்று பூமியின் சுழற்சி "சரியான சமநிலையில்" இருக்கும் என்று அறிவித்ததாக சிலர் நம்பியதையடுத்து பூமியின் சமநிலையை பரிசீலிப்பதற்காக தும்புத்தடியை உதவியின்றி சமநிலையில் நிறுத்தி அதை #broomchallenge எனும் ஹேஸ்  டெக்கின் கீழ் பதிவேற்றியுள்ளனர்.

இதுவரை #broomchallenge  ஹேஸ் டெக்கின் கீழ்  டுவிட்டரில் சுமார் 46.3K டூவிட்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. 

எனினும் இந்த ஹேஸ் டெக்   சவால் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாசா இதுதொடர்பில் எந்த ஒரு அறிவிப்பையும் விடுக்கவில்லை. 

இதேவேளை, தும்புத்தடியை பூமியின் மீது சமநிலையில் நிறுத்துவதற்கு ஒரு பிரத்தியேக நாள் தேவையில்லை, எந்த ஒரு பொருளையும் அதன் புவியீர்ப்பு மையத்தில் பூமியின் மீது நிறுத்திவைக்கும் போது அது உதவியின்றி சுயமாக சமநிலையில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.