பிரித்தானியாவில், பக்கிங்காம்ஷையரை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அதிசயம் ஒன்று நடந்தேறியுள்ளது. 

 குறித்த முதியவர் தவறி விழுந்ததால், அவரது மகனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதியவரின் இடுப்புப் பகுதியின் எண்பு முறிவு ஏற்பட்டிருக்கும் என சந்தேகித்த வைத்தியர்கள் அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கத் தீர்மானித்தனர்.

 பின்னர்,  எக்ஸ்ரேயை பார்த்த வைத்தியர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

முதியவரின் எக்ஸ்ரேயில் இடுப்பு எண்பு பகுதியில், மண்டையோடு ஒன்று தெரிந்துள்ளது. இதனைக்கண்ட வைத்தியர்களும் திகைத்துள்ளனர். குறித்த மண்டையோடு குறித்து, வைத்தியர்களுக்கும் இதுவரை உண்மை தெரியவில்லை.

அந்நிலையில் குறித்த முதியவர் உடல்நிலை தேறி வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடதக்கது.