ரோஹிங்கிய அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று பங்களாதேஷின் தெற்கு கடற் பரப்பில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷ் முகாம்களில் உள்ள சுமார் 130 ரோஹிங்கிய அகதிகளுடன் மலேசியாவுக்கு செல்ல முற்பட்ட படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்க்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் பெண்களும், குழந்தைகளும் ஆகும். அத்துடன் இந்த படகில் பயணித்த 70 பேர் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது இராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஒடுக்குமுறை காரணமாக பங்களாதேஷில் ஆயிரக் கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.